போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’
வெற்றிகரமாக ஓடிய ‘சிறுத்தை’ படத்தில், போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்து இருந்தார். சில வருட இடைவெளிக்குப்பின் அவர், மீண்டும் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் பெயர், ‘தீரன் அதிகாரம் ஒன்று.’ இதில், கார்த்தி ஜோடியாக ரகுல் பிரீத்சிங் நடிக்கிறார். ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்
வெற்றிகரமாக ஓடிய ‘சிறுத்தை’ படத்தில், போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்து இருந்தார். சில வருட இடைவெளிக்குப்பின் அவர், மீண்டும் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் பெயர், ‘தீரன் அதிகாரம் ஒன்று.’ இதில், கார்த்தி ஜோடியாக ரகுல் பிரீத்சிங் நடிக்கிறார். ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய எச்.வினோத் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி இவர் கூறியதாவது:-
“கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இரண்டாவது படம் இது. அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. ‘மாயா’ படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யா ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.
படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரம் சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது.”