இன்னும் 5-10 வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது என கூறிய யுவன்

ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் பாடல்கள் உருவாக்கப்படுவது குறித்து யுவன் பேசினார்.

Update: 2024-09-24 15:58 GMT

சென்னை,

ஏ.ஐ.தொழில்நுட்பம், சமீப காலமாக எல்லோரையும் வெகுவாக ஈர்த்திருக்கிறது. போட்டோக்கள், வீடியோக்களை 'எடிட்' செய்ய, ஏராளமான ஏ.ஐ., செயலிகள் கிடைப்பதால், கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதன் மூலம் சினிமா துறையிலும் பாடல்கள், கதாபாத்திரங்கள் உள்ளிட்ட பலவற்றை உருவாக்க முடிகிறது.

இந்நிலையில், ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் பாடல்கள் உருவாக்கப்படுவது குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

"ஏ.ஐ-யின் அபரீத வளர்ச்சியால் இன்னும் 5-10 வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கே வேலை இருக்காது. ஏ வளர்ச்சி அடைந்து வருகிறது, அதை கையாள தெரிந்தவர்கள் சம்பாதிக்க போகிறார்கள். இருந்தாலும், இசையால் மனிதர்கள் கொடுக்கும் உணர்வை ஏ.ஐ-யால் கொடுக்க முடியாது என ஏ.ஆர்.ரகுமான் கூறியதை நான் ஒப்புக்கொள்கிறேன்,' என்றார்

சமீபத்தில் யுவன் இசையமைத்த 'தி கோட்' படத்தில் வரும் 'சின்ன சின்ன கண்கள்' என்ற பாடலில் ஏ.ஐ. மூலம் மறைந்த பாடகி பவதாரணியின் குரல் பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்