நடிகை யாமி கவுதமிற்கு ஆண் குழந்தை - பிரபலங்கள் வாழ்த்து

நடிகை யாமி கவுதமின் குழந்தைக்கு வேதாவிட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-05-21 04:10 GMT

image courtecy:instagram@yamigautam

சென்னை,

தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் யாமி கவுதம் நடித்து வருகிறார். இவர் தமிழில் ‛கவுரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற படங்களில் நடித்துள்ளார்

தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக உள்ள இவர் யூரி - சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஆதித்யா தர்ரை கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். யூரி - சர்ஜிக்கல் ஸ்டிரைக் படத்தில் யாமியும் நடித்திருந்தார்.

அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு வேதாவிட் என அவர்கள் பெயர் வைத்துள்ளனர். இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர். வேதாவிட் என்ற பெயருக்கு வேதங்களை நன்கு கற்றவன் என்று அர்த்தம்.

அக்சய திருதி என்ற நன்னாளில் எங்கள் குழந்தை பிறந்துள்ளது என்று யாமி கவுதம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு பாலிவுட் நடிகர்களான ரன்வீர்சிங், ஆயுஷ்மான் குரானா, மிருனாள் தாக்கூர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்