பாலியல் புகார் : மோகன்லால், சுரேஷ் கோபி பதில் அளிக்க தயங்குவது ஏன்? - நடிகை கஸ்தூரி கேள்வி

ஹேமா கமிட்டியின் அறிக்கை தொடர்பான கேள்விக்கு மோகன்லால் பதில் அளிக்க வேண்டும் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

Update: 2024-09-02 09:55 GMT

சென்னை,

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி, கேரள அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதனைத் தொடர்ந்து, நடிகைகளிடம் அத்துமீறியதாக நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், மலையாள திரையுலகில் பாலியல் அத்துமீறல் தொடர்பாக ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து மோகன்லால், சுரேஷ் கோபி பதில் அளிக்கத் தயங்குவது ஏன்? என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை கஸ்தூரி, 'ஹேமா கமிட்டியின் அறிக்கை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு மோகன்லால் பதில் அளிக்க வேண்டும். ஒரு மத்திய அமைச்சராக சுரேஷ் கோபி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தால் மலையாள திரையுலகை விட்டே விலகி இருக்கிறேன் என்றார். பாலியல் புகாருக்கு ஆளான நடிகர் முகேஷ், விசாரணை முடியும் வரை தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஹேமா கமிட்டி அறிக்கை தாமதமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் முழுமையாக தனக்கு உடன்பாடு இல்லை' என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்