'அவர்களுக்கு எப்போதுமே நான் சின்னப் பொண்ணுதான்' - நயன்தாரா

நயன்தாரா 20 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கிறார்.;

Update: 2024-08-13 12:04 GMT

சென்னை,

'ஐயா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கிறார். தமிழ் திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறக்கும் நயன்தாரா 'ஜவான்' படத்தில் ஷாருக்கானுடன் நடித்து இந்தியில் அறிமுகமானார்.

இந்த படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியதோடு நயன்தாராவை இந்தி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக்கியது. தற்போது, மலையாளத்தில் நிவின் பாலிவுடன் 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா சினிமாவுக்கு வந்த தொடக்கத்தில் செட்டுக்கு தனது பெற்றோருடன் வருவார் என்பது பலருக்கு தெரியாது

ஆம், சமீபத்தில் ஒரு பேட்டியில் இது குறித்து தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், 'எனது பெற்றோர்கள் என்னுடன் மிகவும் நெருக்கமானவர்கள். அவர்களுக்கு எப்போதும் நான் சின்னப் பொண்ணுதான். அவர்கள் நான் நடிக்க தொடங்கியபோது செட்டுகளுக்கு என்னுடன் வருவார்கள். இது முதல் 3 படங்களுக்கு தொடர்ந்தது. பின்னர் என்னால் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்தது, என்றார்

Tags:    

மேலும் செய்திகள்