'அழகாக இல்லாததால் படம் வரவில்லை' - அல்லு அர்ஜுன்
'கங்கோத்ரி' மூலம் தெலுங்குத் துறையில் அல்லு அர்ஜுன் அறிமுகமானார்.;
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்புக்காக பிலிம்பேர் சவுத் மற்றும் நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார். அல்லு அர்ஜுன் கடந்த 2003 ல் வெளியான கங்கோத்ரி மூலம் தெலுங்குத் துறையில் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதனைத்தொடர்ந்து, ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந்தாபாத், ஆர்யா 2, வருடு, வேதம், ரேஸ் குர்ராம் உள்ளிட்ட 20வதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த புஷ்பா படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன், தனது சினிமா வாழ்வின் தொடக்கத்தில் படம் கிடைக்காமல் சிரமப்பட்டிருக்கிறார். இவரது கங்கோத்ரி படம் ஹிட் அடித்திருந்தாலும் அழகாக இல்லாத காரணத்தினால் அதன் பிறகு படம் எதுவும் வரவில்லை என்று அல்லு அர்ஜுன் தெரிவித்திருக்கிறார்.