என்ன தவம் செய்தேனோ? ஜெயம் ரவியின் நெகிழ்ச்சி

பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் திரையில் உம்மை பிரதிபலிக்க என்ன தவம் செய்தேனோ?” என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்.

Update: 2022-11-05 02:54 GMT

சோழ மன்னன் ராஜ ராஜசோழனின் சதய விழா இனிமேல் ஆண்டு தோறும் அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. தற்போது ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவில் விழாக்கோலம் பூண்டு இருக்கிறது. முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு தஞ்சை பெரிய கோவிலுக்கு அதிகமான மக்கள் வந்து இருக்கிறார்கள். வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகிறார்கள். இதற்கு பொன்னியின் செல்வன் படம்தான் காரணம் என்று கூறப்படுகிறது. அந்த படத்தில் ராஜ ராஜ சோழனின் ஆட்சி காலம் மற்றும் அவரது வீரதீரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அந்த படம் பார்த்ததன் காரணமாகவே அதிக மக்கள் தஞ்சை கோவிலுக்கு வருவதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்து உள்ளார். இந்த நிலையில் ராஜராஜ சோழன் சதயவிழா குறித்து டுவிட்டரில் நெகிழ்ச்சியோடு ஜெயம் ரவி வெளியிட்டுள்ள பதிவில், ''ராஜராஜ சோழனுக்கு சதயவிழா. இவரது புகழையும் பெருமையும் போற்றி அடுத்த தலைமுறைக்கு பகிர்ந்து பெருமை கொள்வோம். பொன்னியின் செல்வனாக திரையில் உம்மை பிரதிபலிக்க என்ன தவம் செய்தேனோ?" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்