ரத்னம் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த விஷால்

நடிகர் விஷால் 'ரத்னம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை இயக்குனர் ஹரி இயக்குகிறார்.

Update: 2024-01-23 18:42 GMT

இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ரத்னம்' திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தினை தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பாராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிப்பு நிறுவனத்தோடு ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையடுத்து 'ரத்னம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'ரத்னம்' படத்தின் புதிய அறிவிப்பை விஷால் வெளியிட்டுள்ளார். அதன்படி, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை போன்ற இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை விஷால் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்