மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தில் ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.;

Update: 2022-08-12 09:03 GMT

 விக்ரம் பிரபுவும், ஸ்ரீதிவ்யாவும் ஏற்கனவே 'வெள்ளைக்கார துரை' படத்தில் ஜோடியாக நடித்து இருந்தார்கள். சில வருட இடைவெளிக்குப்பின், 'ரெய்டு' என்ற புதிய படத்தில், மீண்டும் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள். இந்த படத்தை கார்த்திக் இயக்குகிறார். படத்தை பற்றி அவர் கூறுகிறார்:

``விக்ரம் பிரபு தேர்ந்தெடுக்கும் தனித்துவமான கதைகள் மற்றும் வித்தியாசமான பாத்திரங்கள், திரைப்பயணத்தில் அவருடைய மார்க்கெட் அந்தஸ்தை உயர்த்திக்கொண்டே போகின்றன. அவரது முந்தைய படமான 'டாணாக்காரன்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல், 'ரெய்டு' படமும் ரசிகர்கள் பாராட்டும்படி இருக்கும். படத்தின் தலைப்பே எதிர்பார்ப்பை அதிகப் படுத்தி உள்ளன.

படத்தில் அனந்திகா என்ற மற்றொரு கதாநாயகியும் இருக்கிறார். கனிஸ்க், மணிகண்டன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்