ஓடிடியில் வெளியானது விஜய்யின் 'லியோ'...!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் லியோ திரைப்படம் வெளியாகியுள்ளது.;

Update: 2023-11-24 08:52 GMT

சென்னை,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த மாதம் 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்ததால் வெளியான முதல் நாளில், உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூலித்தது. மேலும் இப்படம் உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்றும், வெளிநாடுகளில் மட்டும் லியோ திரைப்படம் ரூ. 201 கோடி வசூலித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் லியோ திரைப்படம் ஓடிடியில் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்திய பயனாளர்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. 

மேலும் இந்த படம் இந்தியா தவிர மற்ற நாடுகளில் உள்ள பயனாளர்களுக்கு வருகிற 28ம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்