புதிய சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'
விஜய் சேதுபதியின் மகாராஜா படம் ரூ. 100 கோடி வசூலை கடந்தது;
சென்னை,
இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான மகாராஜா, திரையரங்குகளில் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பைப் பெற்றது . மகாராஜா படம் சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலை கடந்தது. இதன் மூலம் நடிகர் விஜய் சேதுபதிக்கு மறக்க முடியாத மைல் கல்லாக மகாராஜா மாறியுள்ளது.இந்த வெற்றியைத்தொடர்ந்து ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்சில் மகாராஜா வெளியிடப்பட்டது.
இதன்மூலம் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மகாராஜா கவனம் ஈர்த்தது. இந்நிலையில் 2024 இல் நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை மகாராஜா பெற்றுள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் சுமார் 18.6 மில்லியன் பேர் மகாராஜா படத்தைப் பார்த்துள்ளனர்.