இந்தியில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.21 கோடி சம்பளம்
ஜவான் படத்திற்காக விஜய் சேதுபதி ரூ.21 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.;
விஜய்சேதுபதி இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் படங்களில் வில்லன் வேடம் ஏற்று பேசப்பட்டார். கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடித்த வில்லன் கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. தெலுங்கு படங்களிலும் வில்லனாக நடிக்கும்படி அழைப்புகள் வருகின்றன. விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்த படங்களைவிட வில்லனாக நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுகின்றன என்ற சென்டிமென்டும் திரையுலகில் நிலவுகிறது.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோனே ஆகியோர் நடிக்கும் ஜவான் இந்தி படத்தில் வில்லனாக நடிக்கவும் விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் அவருக்கு ரூ.21 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிப்பதற்கே ரூ.15 கோடிதான் வாங்குகிறார் என்ற நிலையில், வில்லனாக நடிக்க ரூ.21 கோடி வாங்குவது திரையுலகினர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜவான் படம் இந்தி மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் வெளியாக இருப்பதால் அதிக சம்பளம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது.