ஜாலியாக ப்ரீ ஸ்டைல் ஸ்கூட்டர் ஓட்டிய விஜய் - வைரல் வீடியோ

கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது.;

Update: 2024-04-09 19:03 GMT

சென்னை,

வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

அடுத்ததாக தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் கோட் படப்பிடிப்பு தளத்தில் விஜய் ஜாலியாக ப்ரீ ஸ்டைல் ஸ்கூட்டரை ஒட்டிய வீடியோ வெளியாகி உள்ளது. . இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்