முதல் பாடலை வெளியிடும் விஜய் தேவரகொண்டா-சமந்தாவின் 'குஷி' படக்குழு

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள 'குஷி' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Update: 2023-05-07 16:48 GMT

சென்னை,

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குஷி'. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மகளிர் தினத்தையொட்டி சமந்தா இந்த படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்தார். இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்திருந்தது. 'குஷி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் 'குஷி' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் முதல் பாடல் வருகிற மே 9-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்