விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிக்கும் 'குஷி' படத்தின் டிரைலர் வெளியானது..!

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள 'குஷி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Update: 2023-08-09 13:28 GMT

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குஷி'. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், 'குஷி' படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

'குஷி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்