விடிய, விடிய ஓடிய சம்பூர்ண ராமாயணம்

Update:2023-04-20 09:28 IST

1958-ல் சம்பூர்ண ராமாயணம் திரைப்படம் வெளிவந்தது. சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ் ஆகிய இருபெரும் ஜாம்பவான்கள் நடித்திருந்தனர். சாதாரணமாக ஒரு படத்திற்கு 13 முதல் 15 ரீல்கள்தான் இருக்கும். சம்பூர்ண ராமாயணத்திற்கு 22 ரீல்கள்.



ஒரு காட்சி முடிய சுமார் 4:30 மணி நேரம் ஆகும். இப்போது பொன்னியின் செல்வன் பெரிய கதை என்பதால் அதை இரண்டு பாகங்களாக எடுக்கிறார்கள். அப்போது எல்லாம் இந்த நடைமுறை இல்லை. அப்படி எடுத்தால் ரசிகர்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு முழுக்கதையும் ஒரே நேரத்தில் சொல்லியாக வேண்டும்.

ராமாயணக் கதையை அப்படி பூரணமாகச் சொன்னதால்தான், படம் 23 ரீல்களாக நீண்டது. இருந்தாலும் ரசிகர்கள் படத்தை ரசித்துப் பார்த்தனர். படத்துக்கு இரு இடைவேளை விடப்பட்டது. படம் வெற்றிகரமாக ஓடியது. வெற்றி விழாவிற்கு சிவாஜி கணேசனும், என்.டி.ராமராவும் தேவி திரையரங்கிற்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கு திரையரங்கு சார்பில் மீனாட்சி அம்மன் கோவில் வடிவத்தில் வெள்ளியால் செய்த கலைப்பொருளைக் கொடுத்துக் கவுரவித்தார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்