சிம்பு நடித்துள்ள 'பத்து தல' படத்தின் 'ராவடி' பாடல் வீடியோ வெளியானது..!

சிம்பு நடித்துள்ள 'பத்து தல' திரைப்படத்தின் 'ராவடி' பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.;

Update:2023-03-25 21:15 IST

சென்னை,

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் 'பத்து தல' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 'பத்து தல' படத்தில் இடம்பெற்றுள்ள ராவடி பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சாயிஷா ஆர்யா நடனமாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.Full View

Tags:    

மேலும் செய்திகள்