குழந்தைகளுடன் தலை தீபாவளி கொண்டாடிய விக்கி-நயன்

நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் தனது இரட்டை குழந்தைகளுடன் தலை தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர்.

Update: 2022-10-24 12:57 GMT

சென்னை:

நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது என சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலையை கிளப்பினர். பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே இந்த ஜோடி இந்த வருடம் தலை தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.

இந்நிலையில் இன்று தனது இரட்டை குழந்தைகளுடன் தலை தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர். இதுதொடர்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் குழந்தைகளை ஏந்தியப்படி தீபாவளி வாழ்த்தை தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Full View


Tags:    

மேலும் செய்திகள்