'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்' - இணையத்தில் வைரலாகும் டிரெய்லர்

'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்' படத்தின் இறுதி டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Update: 2024-09-13 02:03 GMT

சென்னை,

கடந்த 2007-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஸ்பைடர் மேன் 3'. இப்படத்தில் வந்த வெனம் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அதன்பிறகு வெளியான ஸ்பைடர்மேன் படங்களில் முக்கிய வில்லனாக வெனம் இருந்தது.

அதனைத்தொடர்ந்து, 'வெனம்' கேரக்டரை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2018-ம் ஆண்டு ரூபன் பிளீஷர் இயக்கத்தில் 'வெனம்' படம் வெளியானது. நல்ல வரவேற்பை பெற்ற இதில், டாம் ஹார்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம், வெனம் : லெட் தேர் கிரேனஜ் என்ற பெயரில் வெளியானது. ஆன்டி செர்க்கிஸ் இயக்கி இருந்த இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படத்தது. தற்போது, இப்படத்தின் மூன்றாம் மற்றும் இறுதிபாகமாக 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்' உருவாகியுள்ளது.

டாம் ஹார்டி நடிப்பில் கெல்லி மார்செல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இறுதி டிரெய்லர் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் 25-ம் தேதி இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் இப்படம் வெளியாக உள்ளநிலையில், படத்தின் இறுதி டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்