ரஜினியுடன் நடிக்கும் வசந்த் ரவி

Update:2023-04-28 09:25 IST

தரமணி, ராக்கி படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் வசந்த் ரவி. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் தயாராகும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்கள் கைவசம் உள்ளன.

இதுகுறித்து வசந்த் ரவி கூறும்போது, "ராம் இயக்கத்தில் நடித்த தரமணி, அருண் மாதேஸ்வரன் இயக்கிய ராக்கி ஆகிய படங்களில் சீரியஸ் கதாபாத்திரங்களில் நடித்தேன். இந்தப் படங் களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறேன். நெல்சன் திலீப்குமார் என்னை அழைத்து ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். இந்தப் படத்தில் நடிப்பதை வாழ்நாளில் மறக்க முடியாது.

சத்யராஜ், ராஜீவ் மேனன் ஆகியோருடன் இணைந்து `வெப்பன்' என்ற படத்திலும் நடிக்கிறேன். இதில் எனக்கு தான்யா ஹோப் ஜோடியாக வருகிறார். ஐஸ்வர்யா ராஜேசுடன் இணைந்தும் புதிய படமொன்றில் நடிக்கிறேன். அதோடு `கண்டநாள் முதல்' படத்தின் இயக்குனர் பிரியா இயக்கும் படத்திலும், `அஸ்வின்ஸ்' என்ற திரில்லர் படத்திலும் நடிக்கிறேன். பிறமொழிகளில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்