பாலிவுட்டை கலக்கிய அமெரிக்க கவர்ச்சி புயல்; டிரோலுக்கு ஆளான போனி கபூர் - வருண் தவான்

வருண் தவான் ஜிகி ஹடிட்டை தூக்கி கன்னத்தில் முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்க சூப்பர்மாடல் போனி கபூருடன் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது;

Update:2023-04-05 15:50 IST

மும்பை

பிரபல அமெரிக்க மாடல் அழகி ஜிகி ஹடிட் சமீபத்திய நிகழ்ச்சிக்காக இந்தியாவிற்கு வருகை தந்தது உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளை உருவாக்கியது

நீடா அம்பானி அண்மையில் பல்துறை கலாச்சார மையம் ஒன்றினை தொடங்கினார். இந்த மையம் கலை, கைவினை பொருள்களை காட்சிப்படுத்த இருக்கிறது. இந்த கலாச்சார மையத்தின் திறப்பு விழா ஆடம்பரமாக நடத்தப்பட்டது.

இந்த விழாவில் ரஜினிகாந்த், ஷாருக்கான் குடும்பத்தினர்,ஐஸ்வர்யா ராய், சல்மான் கான், அமீர் கான், சச்சின் தெண்டுல்கர், ரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், வித்யா பாலன்,உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.

விழாவில் அமெரிக்க மாடல் அழகி ஜிகி ஹடிட் கலந்து கொண்டார்.விழாவில் தங்க நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளை புடவையை அணிந்து, மணிகள் பதித்த ரவிக்கையுடன் ஜிகி தங்கமாக பளபளத்தார்.

விழாவில் வருண் தவான், ஜிகி ஹடிட்டை தனது கைகளில் தூக்கி அவரை சுழற்றிய பின் அவர் கன்னங்களில் முத்தமிட்டு கீழே இறக்கி விட்டார். இதில் ஜிகி அசவுகரியத்தை உணர்ந்ததாக நெட்டிசன்களில் ஒரு பகுதியினர் கருதி விமர்சனம் செய்து வருகின்றனர்.

வருண் தவான் ஜிகி ஹடிட்டை தூக்கி கன்னத்தில் முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்க சூப்பர்மாடல் போனி கபூருடன் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ஜிகி ஹடித் இடுப்பைச் சுற்றி கைகளை வைத்தபடி இருக்கும் புகைப்படம் டுவிட்டரில் பரவி வருகிறது. கழுகு கண் நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை கவனித்து டிரோல் செய்து வருகின்றனர்.

போனி கபூர் கோல்டன் பட்டன்கள் கொண்ட கருப்பு குர்தா அணிந்து ஜிகி ஹடித் இடுப்பை இரண்டு விரல்களால் அழுத்தி பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து உள்ளார். இதனையும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்