10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'வாரிசு' டிரைலர்..
துணிவு படத்தின் டிரைலரை விட ஒரு மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை வாரிசு படத்தின் டிரைலர் பெற்றுள்ளது.
சென்னை,
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. வரும் 12-ம் தேதி ரிலீஸ் ஆகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி', 'சோல் ஆப் வாரிசு' பாடகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது. இந்நிலையில், வாரிசு படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிரைலர் வெளியீடப்படுவதாக படக்குழு அறிவித்தது., வாரிசு படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. அந்த டிரைலரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், 'வாரிசு' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி 10மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
10M+ real time views now
— Sri Venkateswara Creations (@SVC_official) January 4, 2023
Pakka celebration everywhere!#VarisuTrailer ▶️ https://t.co/T3R2d0adWT#Thalapathy @actorvijay sir @directorvamshi @MusicThaman @iamRashmika @karthikpalanidp @Cinemainmygenes @Lyricist_Vivek pic.twitter.com/dAGEOuzMCK