கைவிடப்பட்டதா 'தளபதி 69' படம்?
‘தளபதி 69’ படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.;
சென்னை,
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படம் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தனது 69-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை இயக்குனர் ஹெச். வினோத் இயக்க இருக்கிறார். இந்நிலையில், 'தளபதி 69' படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிப்பதாக இருந்தது. சமீபத்தில், திடீரென அந்நிறுவனம் விலகியதால் படத்தை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருவருடமே இருப்பதால், கட்சி வேலையை விஜய் தீவிரப்படுத்துவார்.
அதனால், 'தளபதி 69' படம் கைவிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. விஜய் பிறந்தநாள் இந்த மாதம் வர இருக்கும் நிலையில், இதுபற்றி அறிவிப்பு வெளியாகுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.