ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் 'வீரன்' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'வீரன்' திரைப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.;

Update:2023-05-18 00:02 IST

சென்னை,

நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் 'வீரன்'. இப்படம் ஜுன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில், ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. வீரன் போஸ்டர் சமீபத்தில் 'வீரன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'பப்பர மிட்டாய்' பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'வீரன்' திரைப்படத்தின் டிரைலர் வருகிற 20-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.



Tags:    

மேலும் செய்திகள்