விடுதலை -2 தாமதத்திற்கு இது தான் காரணம்.. வெற்றிமாறன்
இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் நடைபெற்று வந்தது. வெற்றிமாறன் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த மார்ச் 31-ம் தேதி வெளியான விடுதலை -1 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், விடுதலை 2 தாமதமாக என்ன காரணம் என்று இயக்குனர் வெற்றிமாறன் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "பனி பொழிவில் கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்க 100 நாட்கள் முயற்சி செய்தோம். ஆனாலும் முடியவில்லை. நான் படமாக்கும் விதத்தை பார்த்தால், நான்கு ஆண்டுகள் ஆனாலும் முடியாது என பிறகுதான் தெரிந்தது. இதன் காரணமாக செயற்கை பனிபொழிவை உருவாக்கி படமாக்கினோம். இதனால் தான் விடுதலை 2 முடிக்க காலதாமதம் ஆனது," என்று தெரிவித்தார்.
விடுதலை 1 படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ரஜினி உள்பட திரை பிரிபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.