12 நடிகர்களால் நிராகரிக்கப்பட்ட படம்...தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் பிளாக்பஸ்டர்

தமிழ் பிளாக்பஸ்டர்களில் ஒன்று, இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரலாறு படைத்தது.

Update: 2024-08-09 08:16 GMT

சென்னை,

பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற பல தென்னிந்திய படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகின்றன. இருப்பினும், அதில் சில படங்கள் மட்டும் வெற்றியை ருசிக்கின்றன. அவ்வாறு தமிழ் பிளாக்பஸ்டர்களில் ஒன்று, இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரலாறு படைத்தது.

நாம் பேசும் படம் நான்கு நட்சத்திரங்கள் நடித்தது. மேலும், வெளியாகி அதன் பட்ஜெட்டை விட ஏழு மடங்கு வசூல் செய்தது. அந்த படம் வேறு எதுவுமில்லை கஜினிதான்.

கடந்த 2005-ம் ஆண்டு ஏ. ஆர். முருகதாஸ் இயக்கி சூர்யா நடிப்பில் வெளியான படம் கஜினி. இப்படத்தில் சூர்யாவுடன், அசின், பிரதீப் ராவத், நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதனைத்தொடர்ந்து, இந்தப் படம் பாலிவுட்டில் அமீர் கான் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. இதுவும் பிளாக்பஸ்டராக அமைந்தது.

இந்த பிளாக்பஸ்டர் படத்தில் நடிக்க முதலில் சூர்யா தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம், முதலில் இப்படத்தில் நடிக்க அஜித், மாதவன், மகேஷ் பாபு உள்ளிட்ட 12 நடிகர்களிடம் பேசியதாகவும் அவர்கள் நிராகரிக்கவே 13-வதாக சூர்யாவை அழைத்ததாகவும் ஏ.ஆர்.முருகதாஸ் கூறினார்.

இது மட்டுமின்றி, இந்தி ரீமேக்கிலும் முதல் தேர்வாக அமீர் கான் இல்லை என்றும் இப்படம் முதலில் சல்மான் கானுக்கு வழங்கப்பட்டது என்றும் ஆனால், அவர் ஸ்கிரிப்டை விரும்பாததால் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழில் ரூ.7 கோடியில் தயாரிக்கப்பட்ட கஜினி, பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்தது. இதன் வெற்றிக்குப் பிறகு, 2008-ல் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலித்தது. இதன் மூலம் ரூ.100 கோடி வசூலித்த முதல் இந்தி ரீமேக் படம் என்ற சாதனையை கஜினி படைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்