'அவள் பெயர் ரஜ்னி' படத்தின் டீசர் வெளியானது..!

காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள 'அவள் பெயர் ரஜ்னி' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.;

Update:2023-04-16 05:06 IST

சென்னை,

இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அவள் பெயர் ரஜ்னி'. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு 4 மியூசிக்ஸ் இசையமைக்கின்றனர். ஆர்.ஆர்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இன்வெஸ்டிகேசன் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் 'அவள் பெயர் ரஜ்னி' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்