புதிய கதாப்பாத்திரங்களின் தோற்றத்தை வெளியிட்ட 'பொன்னியின் செல்வன்' படக்குழு

'பொன்னியின் செல்வன்' படக்குழு மேலும் சில கதாப்பாத்திரங்களின் தோற்றத்தை வெளியிட்டுள்ளது.;

Update: 2022-09-04 23:42 GMT

சென்னை,

கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்-1'. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஐஸ்வர்ய லட்சுமி என முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

'பொன்னியின் செல்வன்-1' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. விரைவில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைக்கு வரவுள்ள நிலையில் தொடர்ந்து பல அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது படத்தின் மேலும் சில கதாப்பாத்திரங்களின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்தப் பதிவில், "ஒவ்வொரு ரோஜாவிற்கும் முட்கள் உண்டு. சக்கரவர்த்தி, ராணி தாய் மற்றும் அனைத்தையும் விரும்பும் மகன்!" என்று குறிப்பிட்டு பிரகாஷ்ராஜ் சுந்தர சோழராகவும், ஜெயசித்ரா செம்பியன் மாதேவியாகவும் மற்றும் ரகுமான் மதுராந்தகனாகவும் நடித்திருப்பதாக சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்