'சார்' படத்தின் 'படிச்சிக்கிறோம்' பாடல் வெளியானது!

விமல் நடித்துள்ள 'சார்' படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி உள்ளது.

Update: 2024-09-14 12:30 GMT

சென்னை,

சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020-ம் ஆண்டு 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். தற்போது இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ளார். படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று படக்குழுவினர் பெயரிட்டு இருந்தனர்.

இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் வெளியிடுகிறது. முதலில் மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் ஒரு சில காரணத்தினால் தற்பொழுது "சார்" என மாற்றப்பட்டு இருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில், அதை தொடர்ந்து இரண்டு பாடல்கள் வெளியாக உள்ளன. இந்தநிலையில் தற்போது இப்படத்தின் மூன்றாவது பாடலான 'படிச்சிருக்கிறோம்' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை விவேகா எழுதியுள்ளார். இது குறித்த பதிவை நடிகர் விமல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்