சந்தானம் நடித்துள்ள 'இங்க நான்தான் கிங்கு' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் திரைப்படம் 'இங்க நான்தான் கிங்கு'.;

Update:2024-04-10 21:19 IST
சந்தானம் நடித்துள்ள இங்க நான்தான் கிங்கு படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

சென்னை,

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'இங்க நான்தான் கிங்கு' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச் செழியன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'குலுக்கு குலுக்கு' என்ற பாடல் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இந்த பாடலை டி. இமான், ஸ்ரீநிஷா ஜெயசீலன் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.Full View

Tags:    

மேலும் செய்திகள்