'சூர்யா 44' படக்குழு வெளியிட்ட போஸ்டர் வைரல்

நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.;

Update: 2024-09-07 01:21 GMT

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் . இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகவுள்ளது. சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைப்பெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது, நடிகர் சூர்யா திரைத்துறையில் இதுவரை 27 வருடங்கள் பணியாற்றி முடிவடைந்த நிலையில் அதைப் கொண்டாடும் விதமாக சூர்யா 44 படக்குழு சிறப்பு போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இது தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரான படம் 'கங்குவா'. இப்படம் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. இப்படம் வருகிற நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்