உலகிலேயே அதிக கஷ்டப்படும் ஒரே ஆள் ... - நடிகர் சிம்பு
சூட்டிங் கேன்சல் செய்துவிட்டு வரும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது என்று சிம்பு கூறினார்.;
சென்னை,
இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கமல் ஹாசன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 'இந்தியன் 2' திரைப்படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், சிம்பு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் .
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சிம்பு பேசியதாது, 'தக் லைப்' படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் இங்கு வந்திருக்கிறேன். அடுத்து, 'எஸ்.டி.ஆர்.48' படமும் தொடங்கும். உலகிலேயே அதிக கஷ்டப்படும் ஆள் யார்னா அது உண்மையை வெளிப்படையாக பேசுகிறவர்கள்தான்.
நானும் அதில் ஒருவன். மக்களவை தேர்தல் சமயத்தில் நான் படப்பிடிப்பில் இருந்தேன். சூட்டிங் கேன்சல் செய்துவிட்டு வரும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. ஆனால், ஓட்டுப் போட வராதது எனக்கு வருத்தம்தான்', என்றார்.