கவர்னர் வேலையை தவிர மற்ற வேலைகளை செய்கிறார் - இயக்குனர் பா.ரஞ்சித் விமர்சனம்
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி தேவையற்ற கருத்துக்களை பேசி சர்ச்சையை உண்டாகுவதாக இயக்குனர் பா ரஞ்சித் கூறியுள்ளார்.;
சென்னை,
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி தேவையற்ற கருத்துக்களை பேசி சர்ச்சையை உண்டாகுவதாக இயக்குனர் பா ரஞ்சித் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, "கவர்னர் ஆர்.என்.ரவி கவர்னர் வேலையை தவிர மற்ற வேலைகளை பார்த்து வருகிறார். அவர் எந்த தகவலின் அடிப்படையில் இவ்வாறு பேசுகிறார் என்பது கவலை அளிக்கிறது.
தொடர்ந்து இது மாதிரியான பல்வேறு கருத்துக்களை பொது சூழலில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். அவர் பேசுவது தவறு தான், ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார்.