'கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தின் முதல் பாடல் வெளியானது..!

சதீஷ் நடித்துள்ள 'கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Update: 2023-11-18 07:59 GMT

சென்னை,

அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், 'கான்ஜுரிங் கண்ணப்பன்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, எல்லி அவ்ரம், ஜேஸன் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்துக்கு எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். காமெடி ஹாரர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

'Nobody Sleeps Here' என்ற இந்த பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா, மதிச்சியம் பாலா, எம்.சி.சனா (ராப்) பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.Full View

Tags:    

மேலும் செய்திகள்