ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'லவ் டுடே' படத்தின் இயக்குநர்...!

‘லவ் டுடே' படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.;

Update:2022-11-12 17:47 IST

சென்னை,

ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் லவ் டுடே படத்தின் இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

இது தொடர்பாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் டுவிட்டர் பதிவில்,

நான் இன்னும் என்ன கேட்க முடியும்? சூரியனுக்கு அருகில் இருப்பது போல் இருந்தது. மிகவும் சூடாக இருக்கிறது. இறுக்கமான அரவணைப்பு, அந்த கண்கள், சிரிப்பு, நடை மற்றும் காதல். என்ன ஒரு ஆளுமை. சூப்பர் ஸ்டார் ராஜினிகாந்த் லவ் டுடே பார்த்து என்னை வாழ்த்தினார். நீங்கள் சொன்ன வார்த்தைகளை மறக்க மாட்டேன் சார் என குறிப்பிட்டுள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்