'கோட்' படத்தின் 4வது பாடல்..புதிய அப்டேட் வெளியிட்ட படக்குழு

கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Update: 2024-08-29 14:33 GMT

சென்னை,

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். 'தி கோட்' படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.சமீபத்தில் 'தி கோட்' படத்தின் டிரைலர் வெளியானது. இதில் டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளன. கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், கோட் படத்தின் 4வது பாடல் வரும் 31ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. யுவன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த பாடல் வெளியாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்