சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்ட தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு
ஐதராபாத் அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 25ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.;
ஐதராபாத்,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்த தொடரில் ஐதராபாத் அணியால் மற்ற அணிகளை தனது அபாரமான பேட்டிங்கால் எளிதில் வீழ்த்தி வருகிறது. ஐதராபாத் அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 25ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர்களை தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு சந்தித்துள்ளார். மேலும் வீரர்களுடன் நடிகர் மகேஷ் பாபு புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்களை ஐதராபாத் அணி நிர்வாகம் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.