விஜய் ஆண்டனி படத்தின் டீசர் வெளியானது

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'வள்ளி மயில்'.;

Update:2023-11-28 19:10 IST

சென்னை,

வெண்ணிலா கபடிகுழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என கவனிக்க வைத்த பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இதைத்தொடர்ந்து, இவர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'வள்ளி மயில்'. இப்படத்தில் பிரியா அப்துல்லா, சத்யராஜ், பாரதிராஜா, தம்பி ராமையா, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தினை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். வள்ளி திருமணத்தை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.

இந்நிலையில், இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்