சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' படத்தின் டீசர் வெளியானது
நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.;
சென்னை,
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான 'அயலான்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை 'ரங்கூன்'திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த படத்திற்கு 'அமரன்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இந்த டீசர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.