தமிழின் முதல் கிராபிக்ஸ் நாவல் வெப் தொடர்: ஆர்யாவின் 'தி வில்லேஜ்' தொடரின் டிரைலர் வெளியானது..!

ஆர்யா நடித்துள்ள 'தி வில்லேஜ்' தொடர் தமிழின் முதல் கிராபிக்ஸ் நாவல் வெப் தொடராக வெளியாக உள்ளது.

Update: 2023-11-17 10:27 GMT

சென்னை,

நயந்தாரா நடித்த 'நெற்றிக்கண்' திரைப்படத்தை இயக்கியவர் மிலிந்த் ராவ். இவர் தற்போது ஆர்யாவை வைத்து 'தி வில்லேஜ்' என்ற புதிய வெப் தொடரை இயக்கி உள்ளார். இந்த தொடரில் திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், முத்துகுமார், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ சக்தி நிறுவனம் தயாரித்துள்ள இந்த தொடர் வருகிற 24-ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.

திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த தொடரின் டிரைலரை இன்று நடிகர் கார்த்தி வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள ஜாம்பி தொடர்பான காட்சிகள் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த தொடர் 'தி வில்லேஜ்' என்ற கிராபிக்ஸ் நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இது தமிழின் முதல் கிராபிக்ஸ் நாவல் வெப் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு இரவில் காட்டில் காணாமல் போன தனது மனைவி மற்றும் மகளை காப்பாற்ற போராடும் நாயகனின் கதையாக இந்த தொடர் உருவாகி உள்ளது. 2 நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ள ஜாம்பி தொடர்பான கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் இந்த தொடருக்காக காத்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

'தி வில்லேஜ்' தொடரின் டிரைலர்:

Tags:    

மேலும் செய்திகள்