தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் - தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் முரளி வெற்றி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் முரளி வெற்றி பெற்றுள்ளார்.;

Update:2023-05-01 12:30 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு சங்கங்களில் முக்கியமானதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நலம் காக்கும் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் முரளி வெற்றி பெற்றுள்ளார். தலைவர் பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட டி.மன்னனை விட 150 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 2-வது முறையாக தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்க பொருளாளராக முரளி அணியை சேர்ந்த சந்திரபிரகாஷ் ஜெயினும் வெற்றி பெற்றுள்ளார்.

இந்தத் தேர்தல் மூலம் 2 துணைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்