வாழ்க்கையை வெப் தொடராக்கும் சோனா

பிரபல கவர்ச்சி நடிகை சோனா தனது வாழ்க்கை கதையை முதலில் வெப் தொடராக எடுத்து விட்டு அதன்பிறகு சினிமா படமாக எடுக்கும் முயற்சியில் தற்போது இறங்கி இருக்கிறார்.;

Update:2023-09-13 07:15 IST
வாழ்க்கையை வெப் தொடராக்கும் சோனா

தமிழ் திரையுலகில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சோனா. இவர் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமானார். ரஜினியின் குசேலன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

தனது வாழ்க்கை கதையை திரைப்படமாகவோ அல்லது வெப் தொடராகவோ எடுப்பேன் என்று சோனா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் முதலில் வெப் தொடராக எடுத்து விட்டு அதன்பிறகு சினிமா படமாக எடுக்கும் முயற்சியில் தற்போது இறங்கி இருக்கிறார்.

வெப் தொடருக்கு 'ஸ்மோக்கிங்' என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொடரை சோனாவே டைரக்டு செய்கிறார். சோனா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

சோனா ஏற்கனவே திரையுலகில் சில கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டதாக தெரிவித்து இருந்தார். அந்த விஷயங்களையும் வெப் தொடரில் வெளிப்படுத்த இருப்பதால் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்