விபத்தில் சிக்கிய பாடகி சின்மயி
பாடகி சின்மயி ஆட்டோ டிரைவரால் விபத்தில் சிக்கியதாக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளார்.;
தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக இருப்பவர் சின்மயி. பல புகழ்பெற்ற பாடல்களை பாடி இருக்கிறார். நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் சின்மயி ஆட்டோ டிரைவரால் விபத்தில் சிக்கியதாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து வலைத்தளத்தில் சின்மயி வெளியிட்டுள்ள பதிவில். "குழந்தைகளுடன் காரில் சென்றபோது குடிபோதையில் ஆட்டோ ஓட்டி வந்த டிரைவர் எங்கள் காரில் மோதி விட்டார்.
இதில் கார் முன்பக்கம் சேதம் அடைந்தது. இடித்து விட்டு அந்த ஆட்டோ நிற்காமல் சென்று விட்டது. ஒரு நல்ல மனிதர் தனது காரில் ஆட்டோவை துரத்தினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த விபத்து குறித்து புகார் அளிக்க மனமில்லை. அதனால் பயனும் இல்லை. குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்'' என்று கூறியுள்ளார்.