இரு மொழிகளில் சித்தார்த் படம்

Update:2023-05-05 10:28 IST

சித்தார்த் நடித்துள்ள புதிய படம் `டக்கர்'. இதில் நாயகியாக திவ்யான்ஷா கவுசிக் நடித்துள்ளார். யோகிபாபு, அபிமன்யு சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கார்த்திக் ஜி. கிரிஷ் டைரக்டு செய்துள்ளார்.

படம் பற்றி அவர் கூறும்போது, ``ஏழை இளைஞனுக்கும் கார் கம்பெனி உரிமையாளர் மகளுக்கும் இடையேயான காதலே இந்தப் படம். நாயகன் கிராமத்தில் இருந்து வருகிறான். நாயகி நகரத்து பெண். இருவருக்கும் சிந்தனை வேறாக இருக்கிறது. இவர்கள் சந்திக்கின்றனர். அப்போது நாயகி மீது நாயகனுக்கு காதல் வருகிறது. ஆனால் நாயகிக்கு காதலில் நம்பிக்கை இல்லை.

ஒரு பயணத்தில் அவர்களுக்குள் காதல் வந்ததா? என்பது கதை. காதல் மற்றும் அதிரடி சண்டை படமாக உருவாகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் வெளியாக உள்ளது. படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. இசை: நிவாஸ் கே. பிரசன்னா, ஒளிப்பதிவு: வாஞ்சி நாதன் முருகேசன். படத்துக்கு தணிக்கை குழு `யு ஏ' சான்றிதழ் அளித்துள்ளது'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்