ஹாலிவுட் படத்தில் சமந்தாவிற்கு பதிலாக சுருதி ஹாசன் ?

சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அலர்ஜி நோய் பாதிப்பு காரணமாக படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Update: 2024-01-27 19:27 GMT

சென்னை, 

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளி வந்த யசோதா, சாகுந்தலம் ஆகிய படங்கள் தோல்வி அடைந்த நிலையில் குஷி படம் மட்டும் நல்ல வசூல் பார்த்தது. இதில் அவர், விஜய்தேவரகொண்டாவின் ஜோடியாக நடித்து இருந்தார்.

அதன்பிறகு மயோசிடிஸ் என்ற தசை அலர்ஜி நோய் பாதிப்பு காரணமாக படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் தொடர் சிகிச்சைக்கு இடையே உடற்பயிற்சி மற்றும் பட தயாரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுகிறார். எனவே அடுத்த சில மாதங்களில் மீண்டும் சினிமாவில் நடிக்க சமந்தா முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

சமந்தா ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான் இயக்கும் ஹாலிவுட் படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருந்தார். ஆனால் தற்போது அந்த வாய்ப்பு சமந்தாவின் உடல்நிலை உள்ளிட்ட சில காரணங்களால் பறிபோய் உள்ளது.

இந்த நிலையில் சமந்தா நடிக்க இருந்த ஹாலிவுட் படத்தில் அவருக்கு பதிலாக சுருதிஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்