பிரமாண்டமாக தயாராகும் 'சர்தார்-2'.. வெளியான அப்டேட்

’சர்தார்-2’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 2ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2024-01-29 14:24 IST

சென்னை,

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சர்தார்'. இந்த படத்தில் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் ரூ.100 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. இதற்கிடையே இந்த படத்தின் 2ம் பாகம் வெளியாக உள்ளதாக சமீபத்தில் நடிகர் கார்த்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் 'சர்தார்-2' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 2ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க பி.எஸ்.மித்ரன் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்