சைக்கோ கொலைகள் கதையில் சரத்குமார்

Update:2023-06-02 10:07 IST
சைக்கோ கொலைகள் கதையில் சரத்குமார்

சரத்குமார், அசோக் செல்வன் இணைந்து நடித்துள்ள புதிய படம் `போர்த்தொழில்'. சைக்கோ கொலைகளை பற்றிய சஸ்பென்ஸ் திகில் படமாக தயாராகி உள்ளது. இதில் நிகிலா விமலும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்தப் படத்தை விக்னேஷ் ராஜா டைரக்டு செய்துள்ளார்.

படம் குறித்து சரத்குமார் கூறும்போது, ``போர்த்தொழில் நேர்த்தியான கதை. தொடர் கொலைகள் நடக்கின்றன. அதை துப்பறிந்து கண்டுபிடிக்கும் மூத்த போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். இளம் போலீஸ் அதிகாரியான அசோக் செல்வனை எனக்கு உதவியாக நியமிக்கின்றனர். அவருடன் எப்போதும் எனக்கு பிணக்கு இருக்கும், வேறுபாடுகளை மறந்து இருவர் மனநிலையும் ஒன்றாகி கொலையாளியை கண்டுபிடித்தோமா? என்பது கதை.

துப்பு துலக்க தடயத்தை தவிர்த்து இன்னொரு வகையில் திரைக்கதை பயணிப்பது பார்வையாளர்களுக்கு புதுசாக இருக்கும். படத்தில் ஆக்ஷன் இருக்கும். 70 சதவீதம் படப்பிடிப்பு இரவிலேயே நடந்துள்ளது'' என்றார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்