'சூர்யா 44' - இசையமைப்பாளர் இவரா? வெளியான தகவல்
சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார்.;
சென்னை,
நடிகர் சூர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அடுத்ததாக சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.
சமீபத்தில் இந்த படத்தில் நடிகர் சூர்யா சம்பளம் இல்லாமல் நடிக்கிறார் என்று புதிய அப்டேட் கிடைத்தது. ஏனென்றால், இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் தற்போது சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா மட்டும் இல்லாமல் கார்த்திக் சுப்புராஜும் சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 17-ம் தேதி துவங்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. சமீபத்தில், ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கார்த்திக் சுப்புராஜ் அண்ணா எப்போதும்போல சம்பவத்தை பண்ணுங்க " எனப் பதிவிட்டிருந்தார். இந்த பதிவினை சந்தோஷ் நாராயணன் லைக் செய்திருந்தார். இதனையடுத்து இணையத்தில் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சந்தோஷ் நாராயணன், சூர்யா படத்திற்கு இசையமைத்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.