ஜப்பானில் ரூ.100 கோடி வசூலித்த 'ஆர்.ஆர்.ஆர்'

Update:2023-04-09 06:23 IST

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்த ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. நல்ல வசூலும் பார்த்தது, சமீபத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததால் ஆர்.ஆர்.ஆர் படம் சர்வதேச கவனத்தையும் ஈர்த்தது.

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவருக்கும் ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தை ஜப்பான் மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டனர். ஜப்பான் ரசிகர்கள் மத்தியில் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. நல்ல வசூலும் பார்த்து வந்தது.

தற்போது ஜப்பானில் மட்டும் ஆர்.ஆர்.ஆர் படம் ரூ.100 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. ஆஸ்கார் விருது பெற்ற பிறகு ஜப்பானில் இன்னும் அதிகமானோர் ஆர்.ஆர்.ஆர் படத்தை காண ஆர்வம் காட்டுவதால் அதிக தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்