'மிஸ்டர் பச்சன்' பட தோல்வி: ரூ.4 கோடியை திருப்பி கொடுத்த ரவி தேஜா

ரவி தேஜா நடித்த ‘மிஸ்டர் பச்சன்’ தெலுங்கு படம் பெரும் நஷ்டத்தை சந்தித்த நிலையில், இந்தப் படத்துக்காக தான் பெற்ற சம்பளத்திலிருந்து ரூ.4 கோடியை நடிகர் ரவி தேஜா தயாரிப்பாளருக்கு திருப்பி கொடுத்துள்ளார்.

Update: 2024-09-07 13:22 GMT

ஹைதராபாத்,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவி தேஜா. 'மாஸ் மகாராஜா' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தனது திரையுலக வாழ்க்கையை 'கர்தவ்யம்' படத்தின் மூலம் தொடங்கினார். பின்னர், 'பெங்கால் டைகர், ராஜா தி கிரேட், வால்டேர் வீரய்யா' போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது இவர் ஹரிஸ் ஷங்கர் இயக்கிய 'மிஸ்டர் பச்சன்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுபலேகா சுதாகர் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் தமிழில் வெளியான 'ஜிகர்தண்டா' படத்தை 'கடலகொண்ட கணேஷ்' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்தார். இந்தப் படம் ஓரளவு வெற்றி பெற்றது. இந்தப் படம் இந்தியில் 2018-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற 'ரெய்டு' படத்தின் தழுவலாக உருவானது. படம்ரூ.80 கோடி பட்ஜெட்டில் படம் உருவானதாக கூறப்படுகிறது. படத்தை பீபிள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரித்தது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் எதிர்மறையான விமர்சனங்களால் முதல் நாளில் இருந்தே படம் வரவேற்பை பெறவில்லை. ரூ.80 கோடி பட்ஜெட் கொண்ட படம் மொத்தமாகவே ரூ.15 கோடியை கூட வசூலிக்கவில்லை என கூறப்படுகிறது.

ரவி தேஜா நடித்த 'மிஸ்டர் பச்சன்' தெலுங்கு படம் பெரும் நஷ்டத்தை சந்தித்த நிலையில், இந்தப் படத்துக்காக தான் பெற்ற சம்பளத்திலிருந்து ரூ.4 கோடியை நடிகர் ரவி தேஜா திருப்பி கொடுத்தார். அதேபோல படத்தின் இயக்குநரும் ரூ.2 கோடியை தயாரிப்பு நிறுவனத்துக்கு திருப்பி கொடுத்துள்ளார். தயாரிப்பு நிறுவனம் கேட்காத நிலையில், தானாகவே முன்வந்து படத்தின் நஷ்டத்தை கணக்கில் கொண்டு இருவரும் பணத்தை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வருகிற 12-ந் தேதி வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்